இன்று காலை...
நடுங்கும் குளிர்....வெதுவெதுப்பாக கம்பளி...சுகமான தூக்கம்....எழுவதற்கு சோம்பல்....இதுதான் எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக காலைப்பொழுது...
ஆனால்..இன்று கொஞ்சம் வித்தியாசம்...நான் எழுந்தாக வேண்டிய கட்டாயம்...எனது நண்பன் பாரதி காலை சீக்கிரமாக எழுப்ப சொல்லியிருந்தான்....
ஒரு பெண்ணோடு பேசிக்கொண்டிருக்கும் போது குறுக்கே வரும் நண்பன் போல நல்ல கனவை கலைத்தது அலாரம்....சே...!
எழ மனமில்லாமல் எழுந்தேன்....
பல்துலக்கியில் பற்பசையை எடுத்து, கதவைத்திறந்தேன்....
ஒன்றுமே தெரியவில்லை. ஒரே புகை....ஏதோ தேவலோகக்காட்சியை ஸ்டூடியோவில் எடுப்பது போல்.....'கனவு போல' எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்....திடீரென்று எலும்பை துளைக்கும் சில்லென்று காற்று...
இது கனவல்ல நிஜம்.....
என் கண் முன்னே இயற்கையின் கைகள்....மெதுவாக என்னைத்தழுவிச்சென்றது...
இயற்கையின் வாசத்தை இப்பொழுதுதான் உயிர் வரை உணர்கிறேன்...
இதற்கு முன் இந்த மாதிரி மூடுபனியைக்கண்டிருக்கிறேன். ஆனால் இன்றுதான் அதை ரசிக்கிறேன்.....
இந்த காட்சியை பார்த்தபின் மனதில் தோன்றியது...
வாழ்வின் பொருளை இயற்கையில் தேடுங்கள்......
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Ahaa sensu..oru kavidha maadhiri apdiyae kondu poreengalae...but one small opinion sensu..finishing innum konjam superaa irundhirukkalaam...keep it going dhayalan avargale :-)...
Post a Comment